தொழிலாளி மீது தாக்குதல்

ஆனைமலை அருகே தொழிலாளி மீது தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-05-17 01:15 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் சம்பவத்தன்று சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விவேக் நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், விவேக்கை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்