சாயாவனேஸ்வரர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

பூம்புகார் அருகேசாயாவனேஸ்வரர் கோவிலில் அஷ்டமி வழிபாடு நடந்தது.;

Update:2023-10-07 00:30 IST

திருவெண்காடு;

பூம்புகார் அருகே பிரசித்தி பெற்ற சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நேற்று இந்த கோவிலில் பைரவருக்கு அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், அர்ச்சகர் துரை சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்