பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை

காரியாபட்டி அருகே பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-11 19:07 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணறு பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் 3 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் பேரூராட்சி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு உள்ள கழிவுநீர் காவ்வாயை சுத்தம் செய்வதற்காக பாலம் உடைக்கப்பட்டது. ஒரு மாத காலம் ஆகியும் பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்க முடியாத நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்களை வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் பாலத்தை சீரமைக்க வேண்டியது வங்கி நிர்வாகம் என்றும், வங்கி நிர்வாகம் பாலத்தை சீரமைக்க வேண்டியது பேரூராட்சி நிர்வாகம் என்றும் பரஸ்பர குற்றச்சாட்டி வரும் நிலையில் அவதிப்படுவது பொதுமக்கள் தான். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் வங்கி முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்தை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்