விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2022-11-27 11:26 GMT

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஒரு வார காலமாக பெய்து வந்த மழையின் அளவு குறைந்து தற்போது வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலாத்தலங்களை நாடி வருகின்றனர். அந்த வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கி உள்ளனர்.

உள்ளூர் உட்பட அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அருவியில் கொட்டும் மிதமான நீரில் நீண்ட நேரம் நீராடியும், அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும், சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் அருவியின் மேற்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா படகு துறையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து கோதை ஆற்றின் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்