அருப்புக்கோட்டை ரெயில்நிலையத்திற்கு 60 வயது

காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட அருப்புக்கோட்டை ரெயில்நிலையத்திற்கு 60 வயது ஆகிறது.

Update: 2023-09-02 20:03 GMT

அருப்புக்கோட்டை, 

காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட அருப்புக்கோட்டை ரெயில்நிலையத்திற்கு 60 வயது ஆகிறது.

ரெயில்நிலையம்

மானாமதுரை - மதுரை, மதுரை-விருதுநகர் சந்திப்பு ஆகிய வழித்தடங்களுக்கிடையேயான நெரிசலை குறைக்கும் வகையில் மானாமதுரையில் இருந்து விருதுநகருக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய ெரயில் பாதை அமைக்கும் திட்டம் 3-வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

1963-ம் ஆண்டு 23 கி.மீ தூரமுடைய விருதுநகர் - அருப்புக்கோட்டை ெரயில் பாதை திறக்கப்பட்டு அதே ஆண்டில் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் காமராஜரால் அருப்புக்கோட்டை ெரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மின்மயமாக்கல்

மேலும் 1964-ல் 44 கி.மீ. தூரமுள்ள அருப்புக்கோட்டை-மானாமதுரை ெரயில் பாதையும் திறக்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மானாமதுரை - அருப்புக்கோட்டை - விருதுநகர் ெரயில் பாதையானது வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப 2008-ம் ஆண்டு அகல ெரயில் பாதையாக மாற்றுவதற்காக அருப்புக்கோட்டை ெரயில் நிலையம் மூடப்பட்டது.

அகல ெரயில் பாதை பணிகள் முடிவுற்று பின்னர் மீண்டும் 2012-ம் ஆண்டு அருப்புக்கோட்டை ெரயில் நிலையம் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த ெரயில்வே பாதை அனைத்தும் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக தேவை

இந்த ெரயில் நிலையத்தை ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் அன்றைய முதல்-அமைச்சர் காமராஜர் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதி மக்களின் வர்த்தக தேவையை அறிந்து கொண்டு வந்துள்ளார்.

இந்த ெரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் பணிகளும் நடைபெறுகிறது. இந்தநிலையில் இந்த ெரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

வைரவிழா

இதன் வைரவிழா நிகழ்ச்சி ெரயில் நிலையத்தில் நடைபெற்றது. அருப்புக்கோட்டை வட்டார ெரயில் பயணிப்போர் நலச்சங்கம், சொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தக சங்கம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இந்த வைர விழா நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், வர்த்தக சங்கத்தினர், முன்னாள் ராணுவ வீரர்கள், ெரயில் பயணிப்போர் சங்கத்தினர், ெரயில் ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை ெரயில் சேவை குறித்து சிறப்புரையாற்றினர். விழாவில் ெரயில்வே அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த ரெயில்நிலையத்தை இ்ன்னும் மேம்படுத்தி எண்ணற்ற ரெயில்கள் இந்த வழியாக இயக்க வேண்டு்ம் என்பதே வணிகர்கள், அருப்புக்கோட்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்