காஞ்சீபுரம் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

காஞ்சீபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-08 09:10 GMT

காஞ்சீபுரம் மண்டலக் கலை பண்பாட்டு துறையின், காஞ்சீபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறுகாவேரிபாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி ஆகியோர் முன்னிலையில் 10 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட்டது.

கலைமுதுமணி பிரிவு: காஞ்சிபுரம் வ.ஜபருல்லாகான் (மிருதங்க கலைஞர்), திம்மராஜம்பேட்டை சுந்தரமூர்த்தி (கைசிலம்ப கலைஞர்).

கலைநன்மணி பிரிவு: மாமல்லபுரம் து.தனசேகரன் (கற்சிற்பக் கலைஞர்), ஐய்யம்பேட்டை ம.அண்ணாமலை (ஆர்மோனிய பாடகர்).

கலைசுடர்மணி பிரிவு: மணமை சா.மதன் (ஓவியக் கலைஞர்), தெள்ளிமேடு கு.கனகராசு (நாதஸ்வரக் கலைஞர்).

கலைவளர்மணி பிரிவு: காஞ்சிபுரம் சு.லலிதா (பரதநாட்டியக் கலைஞர்), பட்டிப்புலம் ராஜரத்தினம் (சிற்பக்கலைஞர்).

கலைஇளமணி பிரிவு: த.திவ்யா (பரதநாட்டியக் கலைஞர்), வி.தர்ஷினி (சிலம்பாட்டக் கலைஞர்).

ஆகியோர்களுக்கு விருதுகள், காசோலைகள் மற்றும் பொன்னாடைகள் போத்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்