கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் - 19, 20ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.