கலைஞர் நூற்றாண்டு நூலகம்; எழுத்துக்களின் தலைநகரான மதுரையில் அமைக்கப்பட்டுள்ள வாசக பொற்சபையே இந்நூலகம் - வெங்கடேசன் எம்.பி டுவீட்
மதுரையின் அறிவுசார் செயல்பாடு, வளர்ச்சி ஆகியவற்றின் ஆதாரமையமாக இந்நூலகம் விளங்கும் என வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நூலகம் மதுரையின் அறிவுசார் செயல்பாடு, வளர்ச்சி ஆகியவற்றின் ஆதாரமையமாக இந்நூலகம் விளங்கும் என வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மதுரையின் அறிவுசார் செயல்பாடு, வளர்ச்சி ஆகியவற்றின் ஆதாரமையமாக இந்நூலகம் விளங்கும்.
எழுத்துக்களின் தலைநகரான மதுரையில் அமைக்கப்பட்டுள்ள வாசக பொற்சபையே இந்நூலகம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.