சிறுவேளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா
சிறுவேளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
செய்யாறு
சிறுவேளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
செய்யாறு தாலுகா சிறுவேளியநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கே.சிவசங்கரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் தோல்கருவி இசைத்தல், கும்மி நடனம், ஒயிலாட்டம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் புருஷோத்தமன் கலந்துகொண்டு கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். முடிவில் பள்ளி ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.