கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி

பெரிய மணக்குடி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-10-26 00:54 IST

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி கல்லங்குறிச்சி அருகே உள்ள பெரிய மணக்குடி கிராமத்தில் நடைபெற்றது. இதில் கல்லங்குறிச்சி கோவிலில் இருந்து கலியுக வரதராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளினர். பக்தர்கள் பல்லக்கை சுமந்தவாறு பெரியமணக்குடியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த திடலில் வைத்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் கலியுக வரதராஜ பெருமாள் அம்பு எய்தினார். இதையடுத்து கிராமத்தை சுற்றிலும் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லங்குறிச்சி மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்புவிடும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்