எல்லை தாண்டி வந்ததாக கைது: 6 இலங்கை மீனவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
எல்லை தாண்டி வந்ததாக கைது: 6 இலங்கை மீனவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
இலங்கை புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த மீனவர்கள் சஞ்சீவா (வயது 30), ரணில் சாமர (31), உதாரா கசுன்(27), செஹான் ஸ்டீபன் (24) உள்பட 6 பேர் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்ததாக இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் இவர்கள் 6 பேரையும் தூத்துக்குடி தருவைகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 படகுகளில் எல்லை தாண்டி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 6 மீனவர்களையும் நேற்று தருவைகுளம் போலீசார் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கவிதா, 6 மீனவர்களையும் வரும் டிசம்பர் 1-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இலங்கை மீனவர்கள் 6 பேரும் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.