பெரியகுளம் அருகே பெண் தபால் அலுவலரை கத்தியால் கீறியவர் கைது

பெரியகுளம் அருகே பெண் தபால் அலுவலரை கத்தியால் கீறியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-24 21:00 GMT

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர். இவரது மனைவி கார்த்திகா (வயது 34). இவர் வடுகப்பட்டியில் உள்ள தபால் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தபால் அலுவலகத்திற்கு வடுகப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (40) என்பவர் மதுபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கார்த்திகா வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கார்த்திகா, வடுகப்பட்டி சின்ன கடைவீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார், கார்த்திகாவிடம் தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கி, சிறிய கத்தியால் கார்த்திகாவின் முகம் மற்றும் தலைப்பகுதியில் கீறி காயம் ஏற்படுத்தினார். இதில் காயமடைந்த கார்த்திகா சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்