டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர், ஆயில் திருடிய 2 பேர் கைது

பஞ்சப்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர், ஆயில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-18 18:45 GMT

பாலக்கோடு

பஞ்சப்பள்ளி அருகே கொக்கிகல் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை மர்ம நபர்கள் உடைத்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். இதுகுறித்து மின்வாரிய உதவிபொறியாளர் திவாகர் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செம்மனஅள்ளியை சேர்ந்த நாகராஜ் (வயது24), விஜி (25) ஆகிய 2 பேரும் காப்பர் ஒயர், ஆயிலை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்