லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கை
போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜா (வயது57), காவேரிப்பட்டணம் சுபாஷ் சந்திர போஸ் தெரு மது (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.