பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

சிங்காரப்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-01 15:46 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த மே மாதம் பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சார்லஸ் (வயது 25) என்ற வாலிபர் மாணவியை கடத்தியதாக தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்