கொலை வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
கொலை வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சாத்தூர் அருகே 2017-ல் நடைபெற்ற கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முருகேசன் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அவருக்கு மாவட்ட நீதிபதி திலகம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது இன்ஸ்பெக்டர் முருகேசன் திருச்சி அருகே உள்ள வையம்பட்டி பகுதியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.