மோகனூரில் மது விற்ற மளிகைக்கடைக்காரர் கைது

Update: 2023-06-08 18:45 GMT

மோகனூர்

மோகனூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மோகனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தார். அப்போது ஆண்டாபுரம் தங்கப்பிள்ளை என்பவரது மகன் குமரவேல் (வயது 42) என்பவர் மளிகைக்கடையில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், குமரவேல் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்