பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது 57 பவுன் நகைகள் மீட்பு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 57 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-24 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 57 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தனிப்படை

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கூறியதாவது.:-

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட வாணி மற்றும் மெய்யநேந்தல் கிராமங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் பூட்டை உடைத்து 64 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது. இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துறை மேற்பார்வையில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சிவகங்கையை அடுத்த வைரவன்பட்டி மற்றும் கீழக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

5 பேர் கைது

அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் வைரவன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது24), பால்பாண்டி (24) மற்றும் கீழக்குளத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 57 பவுன் நகைகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல் சிவகங்கை, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மானாமதுரை, சிப்காட் ஆகிய பகுதிகளில் 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த கீழ குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (25) டி. வேளாங்குளத்தைச் சேர்ந்த சூர்யா (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்