ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் தன்னுடைய வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பெருமாள் (வயது 25) என்பவர் இளம்பெண் குளிப்பதை செல் போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அந்த இளம்பெண் சத்தம் போட்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அந்த இளம்பெண் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நேற்று பெருமாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது