மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தவர் கைது
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த முரளி ராஜன் மகன் சித்திரவேல் (வயது21) என்பதும், மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.