சேலம் அரியானூர் பகுதியில் டாக்டர், வக்கீல் வீட்டில் கைவரிசை காட்டியவர் கைது

சேலம் அரியானூர் பகுதியில் டாக்டர், வக்கீல் வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-04-01 23:00 GMT

பனமரத்துப்பட்டி:

திருட்டு

சேலம் மாவட்டம் அரியானூர் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் டாக்டர் அருண்பாலாஜி. இவருக்கு டாக்டர் அஸ்வதி (வயது 32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அருண்பாலாஜி, தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அஸ்வதி சேலத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

அருண்பாலாஜி பணிக்கு சென்ற நேரத்தில் வீட்டில் அஸ்வதி மற்றும் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அஸ்வதி மற்றும் குழந்தைகளை கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

கைது

மேலும் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் ஏனோக் சேவியர் (39) என்பவரின் பூட்டிய வீட்டில் 4 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காரப்பட்டியை சேர்ந்த ரேணு (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் ரேணுவின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்