ஓசூர்:
ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் செயல்படும் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாகவும், கேரள மசாஜ் எனக்கூறி பணம் பறிப்பதாகவும் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விபசாரம் நடத்தியதாக ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.