பொம்மிடி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

பொம்மிடி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-13 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் பொம்மிடி அடுத்த கருங்கல்லூர் பகுதியில் திடீரென ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

அப்போது கருங்கல்லூர் அடுத்த ராஜாக்கொட்டாயில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக கோவிந்தன் என்பவரின் மகன் பிரபு (வயது 28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூங்காவனம் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதான இருவரும் அந்த பகுதியில் வைத்திருந்த பேரலில் 100 லிட்டர் ஊறல் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அதை கைப்பற்றி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்