பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியில் தனியார் நூற்பாலை உள்ளது. இதன் பின்புறம் உள்ள இரும்பு குடோனில் கடந்த 26-ந் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்து நூற்பாலை மேலாளர் வெங்கடேசன் பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொம்மிடி விடிவெள்ளி நகரை சேர்ந்த மூர்த்தி (வயது 45), வினோபாஜி தெருவை சேர்ந்த ரஞ்சித் (40), தமிழரசன் ஆகியோர் நூற்பாலையில் இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.