நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது

நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது

Update: 2022-10-28 18:45 GMT

நாமக்கல் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். லாரி பட்டறை அதிபர். இவருடைய மனைவி இந்திராணி (வயது 60). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்திராணி அணிந்திருந்த 9½ பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணகுமார் (28), திருப்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் (32) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்