நாமக்கல் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

நாமக்கல் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

Update: 2022-09-11 16:30 GMT

சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் அறிவுரையின்படியும், அத்துறையின் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, ஈரோடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரிலும் ஈரோடு குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், நாமக்கல் குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் நாமக்கல் அருகே உள்ள கல்யாணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டில் சுமார் 1,200 கிலோ ரேஷன்அரிசி எவ்வித ஆவணமும், ரசீதும் இன்றி இருப்பது கண்டறிப்பட்டு மொபட்டுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கல்யாணி தேவேந்திரர் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்