இரும்பாலையில்முதியவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது14 பவுன் தங்க நகைகள் மீட்பு

இரும்பாலையில் முதியவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2023-09-28 20:07 GMT

சேலம்

இரும்பாலையில் முதியவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

தங்க நகைகள் திருட்டு

சேலம் கொண்டலாம்பட்டி அருகே போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து சென்றனர். அப்போது, சிவதாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காரில் இருந்தவர்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், காருக்குள் இருந்த 3 பேரும் மதுபோதையில் இருப்பதும், அவர்கள் இரும்பாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க நகைகளை திருடிக்கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கிக்கொண்டனர்.

2 பேர் கைது

விசாரணையில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த நவீன்குமார் (வயது 25), கிருஷ்ணன் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெரியசாமி (90) என்பவரது வீட்டிற்குள் புகுந்து 14 பவுன் தங்க நகைகளை திருடி சென்றிருப்பதும் தெரியவந்தது. திருட்டு நடந்த முதியவரின் வீடு இரும்பாலை பகுதியில் உள்ளதால் 2 பேரும் இரும்பாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரும்பு ராடுகள், கத்திகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தப்பி ஓடிய சத்தியமூர்த்தி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்