பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் தண்டுகாரணஅள்ளி பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் விஜயகாந்த் (வயது 30). இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை, விஜயகாந்திடம் கேட்ட போது அந்த மாணவியின் தந்தையை அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த், அவருடைய தந்தை நடராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.