ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செம்படவர் தெருவை சேர்ந்தவர் ராஜூ என்கிற ராஜா (வயது 31). ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் பர்கத் (30). பிரபல ரவுடிகளான இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்ற இவர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால், அவர்கள் இருவரையும் ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரில் ராஜூ தர்மபுரி சிறையிலும், பர்கத் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.