கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 21 பேர் கைது

Update: 2023-08-20 19:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 21 பேரை போலீசார் கைதுசெய்தனர்

கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது ஓசூர் டவுன், சிப்காட், மத்திகிரி, அட்கோ, சூளகிரி, பாகலூர்- ஊத்தங்கரை பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,750 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி சீட்டுக்கள்

இதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, பர்கூர், கெலமங்கலம், ஊத்தங்கரை பகுதிகளை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,400 மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ளலாட்டரி சீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.

மேலும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாலகுறி முருகன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சேட்டு (27), கார்த்திக் (22) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்