நகை திருடிய வாலிபர் கைது

Update: 2022-10-06 16:35 GMT


திருப்பூர் சேரன் தொழிலாளர் காலனியை சேர்ந்தவர் இளமுருகு (வயது 52). இவர் தனது குடும்பத்துடன் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக சென்னைக்கு புறப்பட்டார். திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறியதும், அவரது கைப்பையை காணவில்லை. அதில் 1 செல்போன், 1 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதுபோல் நேற்று முன்தினம் திருப்பூர் ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் மையத்துக்கு பீகாரை சேர்ந்த தீபக்குமார் (47) வந்து படிவத்தை பூர்த்தி செய்தபோது அவரது செல்போனை காணவில்லை. அவரும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவரை ரெயில் நிலையம் அருகே வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 1 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்