பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்:ஆரல்வாய்மொழியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்த ஆரல்வாய்மொழியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-09-26 18:53 GMT

ஆரல்வாய்மொழி,

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்த ஆரல்வாய்மொழியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மர்ம நபர்களால் பா.ஜ.க.வினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டும், வாகனங்கள் எரிக்கப்பட்டும் வருகிறது. இதனை கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தோவாளை ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணன், மகாதேவன்பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். நகர தலைவர் நரேந்திரகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மகாதேவன், மாதேவன்பிள்ளை, நல திட்ட பிரிவு தலைவர் சிங்காரவேல், ஒன்றிய பார்வையாளர் ஆறுமுகம், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சுடலைமுத்து, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்