நகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்
நகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடந்தது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வாலாஜா நகராட்சியில் முதல் முறையாக வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. 11-வது வார்டில் நடந்த கூட்டத்தில் நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை கலந்து கொண்டு பேசுகையில் வாலாஜா நகராட்சி முதல் நகராட்சி. இங்குள்ள அலுவலகம் மிகப் பழமையானது. ஆகவே புதிய அலுவலகம் கட்டுவதற்கு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரிவேட்டான் தெருவில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படும். போர்வெல் அமைத்து மின்மோட்டார் பொருத்தப்படும். பூசாரி பச்சையப்பன் தெருவில் உள்ள சிறு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என்றார். முன்னதாக இந்த கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.