திரவுபதி அம்மன் கோவிலில் அரவான் களபலி நிகழ்ச்சி
திரவுபதி அம்மன் கோவிலில் அரவான் களபலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி கடந்த 15-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, அன்று முதல் நாள்தோறும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வந்தது. நேற்று காலை கிராமத்தின் ஏரிக்கரையில் அரவான் களபலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.