பிளஸ்-2 தேர்வில் அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி சாதனை

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-06-23 18:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தது. பிளஸ்-2 தேர்வில் மாணவி தர்ஷினி 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மாணவி தமயந்தி 579 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி பிரியதர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.

இப்பள்ளியில் படித்த 132 மாணவ-மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 40 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 37 பேரும் எடுத்தனர். கணினி அறிவியல் பாடத்தில் 4 பேர், வணிகவியல் பாடத்தில் 3 பேர், கணக்கு பதிவியல் பாடத்தில் ஒருவர், கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய 120 மாணவ-மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி வர்ஷா 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி சுஷ்மிதா 474 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவன் லோகேஷ் 472 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.

450 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 35 பேரும் பெற்றனர். இதில் அறிவியல் பாடத்தில் 10 பேர், சமூக அறிவியல் பாடத்தில் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் அம்பாரி சுப்பிரமணியம், கூடுதல் தாளாளர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் செல்போன்களை வழங்கி பாராட்டினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் பள்ளி முதல்வர் ராஜன், ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்