அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-11-22 19:30 GMT

மாரண்டஅள்ளி:-

மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். சீனியர் பிரிவில் கபடி, கோ-கோ போட்டிகளில் இந்த பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். மேலும் வலைப்பந்து போட்டியில் சூப்பர் சீனியர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். தடகள போட்டியில் ஜூனியர் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர் தடை ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர். தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றனர்.

சூப்பர் சீனியர் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர், 1,500 மீட்டர் போட்டியில் முதலிடமும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் முதலிடமும், 800 மீட்டர் ஓட்டத்தில் 2-வது இடமும், மும்முறை தாண்டுதலில் 2-வது இடம் பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். சாதனை மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் நாகராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஜெயபிரகாஷ் நாராயணன், சத்தியமூர்த்தி, ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்