மாணவர்களுக்கு பாராட்டு விழா
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி (மேற்கு):
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, 17- வயதுக்குட்பட்டோர் தமிழ்நாடு ஆக்கி அணி தேர்வு தர்மபுரியில் நடந்தது. இதேபோல் 19 வயதுக்குட்பட்டோர் ஹேண்ட் பால் அணி தேர்வு நீலகிரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர் நவினேஸ்வரன் தமிழ்நாடு ஆக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதேேபால் மாணவர் என். மணிகண்டன் 19 வயது ஹேண்ட்பால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் கலந்து கொண்டு, மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், சசிகுமார், கூத்தராஜன், மகேஸ்வரி, ராமலட்சுமி ஆகியோரையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை சங்க செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ் குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் நன்றி கூறினார்.