2 லட்சம் மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலருக்கு கலெக்டர் பாராட்டு

2 லட்சம் மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்

Update: 2023-06-06 18:45 GMT

இளையான்குடியில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிய சமூக ஆர்வலர் அப்துல் மாலிக்குக்கு பசுமை முதன்மையாளர் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் பாராட்டினார். அதன்படி கலெக்டர் தலைமையிலான 12 உறுப்பினர்களை கொண்ட ஆய்வு கமிட்டியின் மூலமாக சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் பசுமை முதன்மையாளர் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டார். சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் இளையான்குடி தாலுகா அலுவலகம், மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் மூலிகை தோட்டம் அமைத்தும், இளையான்குடியில் அமைந்துள்ள பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல், இளையான்குடி கண்மாய் கரை பகுதிகளிலும், புறவழிச் சாலை பகுதிகளிலும் பனை விதைகள், மரக்கன்றுகள் என 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியதற்காக அவருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக பசுமை முதன்மையாளர் விருதும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கி பாராட்டினார். பசுமை முதன்மையாளர் விருது பெற்ற அப்துல் மாலிக்கை இளையான்குடி தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்