மின்வாரிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் - ஐகோர்ட்டு உத்தரவு

மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தேவதாசை ஐகோர்ட்டு நியமித்துள்ளது.

Update: 2024-08-23 14:41 GMT

சென்னை,

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக ஷாஜகான் என்பவரும், பொதுச்செயலாளராக சம்பத் என்பவரும், பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தங்கள் செயல்பாட்டில் தலையிட பழைய நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரியும், தங்கள் தேர்தலை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரியும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கூட்டமைப்பின் சட்ட திட்டங்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், இருதரப்பினரும் அந்த குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கும், கூட்டமைப்பை நிர்வகிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாசை நிர்வாகியாக நியமித்து அவர் உத்தரவிட்டார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்