மானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மானிய விலையில் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-11-27 19:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ திட்டம் மூலம் 6 ஆதிதிராவிடர் மற்றும் 1 பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராகவும், 18 முதல் 65 வயதுடையவராகவும், விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவோ அல்லது விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்ககூடாது. .இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மேலாளர் அலுவலம், தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி (606-202) என்ற முகவரியிலோ அல்லது 04151-2255411 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த அரிய வாய்ப்பினை பயன்டுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்