கால்நடை மருத்துவ அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்

இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-09-09 18:02 GMT

சென்னை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (பி.வி.எஸ்.சி. அண்ட் ஏ.எச்., பி.டெக்) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளம் adm.tanuvas.ac.in மூலம் (ஆன்லைன்) வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் 26-ந்தேதி மாலை 5 மணி வரை வரவேற்க்கப்படுகின்றன.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்