பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்
பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே 'எங்கிருந்தும், எந்நேரத்திலும்' இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
பட்டா மாறுதலின் ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு 'குறுஞ்செய்தி் வாயிலாக தெரிவிக்கப்படும். பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள், பட்டா மாறுதல் உத்தரவு நகல், பட்டா, சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.