ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள- மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் பல்நோக்கு சுகாதார அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் பல்நோக்கு சுகாதார அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பணியிடங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்நல வாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடம் பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் (நிலை-2) பணியிடம் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இந்த பதவி முற்றிலும் (11 மாதங்கள்) தற்காலிகமானது.
எந்தக்காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. இதற்கு தகுதியானோர் விண்ணப்பிக்க வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும். இப்பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
மேலும், சிவகங்கை துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் துணை இயக்குனர் சுகாதார பணிகள், சிவகங்கை அலுவலகத்தில் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.