பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்: மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் - மெட்டா நிறுவனம்

விரைவாக சிக்கலைத்தீர்த்து விட்டோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-06 05:09 GMT

சென்னை,

உலகின் முன்னணி சமூக வலைதளங்களாக விளங்குபவை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம். மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த வலைதளங்கள் நேற்று இரவில் திடீரென முடங்கின. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்பற்று இருந்தன. உலகம் முழுவதும் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரியவந்தது.

சைபர் கிரைம் ஹேக்கர்களின் கைவரிசையால் இந்த தடை ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு துண்டிக்கப்பட்டதா என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. மெட்டா நிறுவனமும் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் இந்த வலைதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், உலகமே முடங்கியதுபோல தவிப்புக்கு ஆளானார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். நாங்கள் விரைவாக அந்த சிக்கலைத்தீர்த்துவிட்டோம். மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டிஸ்டோன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்