அந்தியூர் அய்யப்பன் கோவிலில் 18-ம் படி பூஜை

அந்தியூர் அய்யப்பன் கோவிலில் 18-ம் படி பூஜை நடந்தது.;

Update:2022-12-19 03:18 IST

அந்தியூர்

அந்தியூர் பெரிய ஏரிக்கரை பகுதியில் அய்யப்பன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் அய்யப்ப சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் அய்யப்பசாமியை வைத்து மேளதாளங்கள் முழங்க அய்யப்ப பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலம் அந்தியூரில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் அய்யப்பசாமியை வரவேற்று தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் 18-ம் படி பூஜை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்