ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம்: கவர்னரின் காலதாமதத்தை தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கவர்னரின் காலதாமதத்தை தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-12-15 09:32 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன. கவர்னர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது.

கவர்னரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக கவர்னரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்