அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு

அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

Update: 2022-11-02 18:54 GMT


தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஆபாஷ் குமார் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட்மேரி ஆகியோர் தலைமையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக ஒப்பந்தத்தில் உள்ள 5 அரிசி அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆலைகளில் உள்ள பதிவேடுகள், அரிசி இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் கண்காணிக்குமாறு ஆலை உரிமையாளர்களையும், பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்