போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பத்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று போதைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் திருப்பத்தூர் பிரதான சாலை, அரசு தலைமை மருத்துவமனை, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலால் உதவி ஆணையர் ஜோதிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.