அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கே.பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-12 02:17 GMT

நாமக்கல், 

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் 24 ,மதுரை,திருப்பூரில் தலா ஒரு இடம் என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.கே .பி.பி .பாஸ்கர் மற்றும் உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது .

பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்