மின்னல் தாக்கியதில் மேலும் ஒரு பெண் சாவு

மேலூர் அருகே மின்னல் தாக்கியதில் மேலும் ஒரு பெண் இறந்தார்.

Update: 2023-09-23 19:27 GMT

மேலூர்,

மேலூர் அருகே அழகர்மலை அடிவார பகுதியில் உள்ளது சாம்பிராணிபட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பூமா (வயது 35), வேலு என்பவரது மனைவி லட்சுமி (40) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அழகர்மலை அடிவாரத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது பெய்த மழையில் மின்னல் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பூமா இறந்தார். 3 ஆடுகளும் இறந்தன. லட்சுமி படுகாயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனால் மின்னல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்